உயிருக்கு போராடிய சீரியல் நடிகை.. அந்த நேரத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டான்சர்..!

Author: Vignesh
21 August 2023, 4:45 pm

ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் வட்டாரத்தில் பிரபலமானவர் சந்தியா ஜகர்லமுடி.

vamsam-updatenews360

மேலும், இவர் சந்திரலேகா போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். இப்போது இவர் சீரியல் பக்கம் தலை காட்டாமல் தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார். அண்மையில், இவர் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Sandhya Jagarlamudi-updatenews360

அதாவது, 2006 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் கோவில் யானையுடன் எடுக்கப்பட்டதாம். அப்போது, யானை தன்னை மோசமாக தாக்கியதாகவும், அதனால் தனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களை அகற்ற நேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

Sandhya Jagarlamudi-updatenews360

மேலும், யானைத் தன்னை தூக்கி நசுக்கிய போது உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் தான். எனவே, தன்னால் வலி தாங்க முடியாமல் தான் துடித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு சிலர் தன்னை தூக்கிக்கொண்டு ஓடியதாகவும், அப்போது தன்னை தூக்கிக் கொண்டு போன டான்ஸர்களின் ஒருவன் தான் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட தனக்கு உதவி செய்வது போல் நடித்து தன்னுடைய மார்பில் கை வைத்து அசிங்கமாக நடந்து கொண்டதாகவும், தன் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் அதைத்தான் தான் சொல்வேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?