காதல்.. கல்யாணம்… தேனிலவு… உடனே விவாகரத்து : ஆசைப்பட்டு மோசம் போன சீரியல் ஜோடிகள்!!

Author: Vignesh
7 July 2023, 5:37 pm

சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.

விஷ்ணுகாந்த் – சம்யுக்தா

samyuktha - updatenews360

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் – நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்து, பின்னர் திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை. இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்ததோடு சோஷியல் மீடியாக்களில் ஒருவரை இருவர் மாறி மாறி மோசமாக , கீழ்த்தரமான வார்த்தைகளால் குற்றம் சாட்டினர்.

தினேஷ் – ரச்சிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

rachitha-mahalakshmi_updatenews360

ரக்ஷிதா தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புகிறார். அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், விவாகரத்து எளிதில் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இப்படி ரக்ஷிதா செய்தார் என்று தினேஷ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், ரக்ஷிதாவின் வழக்கறிஞர் சொல்லிக் கொடுத்து இப்படி செய்தார் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ரக்ஷிதாவின் உண்மை முகத்தை அறிந்த பலரும் அவரை சமூக வலைதளத்தில் கடுமையாக கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திவ்யா-அர்னவ்

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா. மேலும் அர்னவ் உடன் சேர்ந்து திவ்யா’ கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்கள்.

அப்போது ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்கள். குழந்தை வயிற்றில் இருக்கும் போது இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வரை சென்று மீடியாவிற்கு வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே அர்னவ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் – ஹரிப்பிரியா

vignesh haripriya-updatenews360

வாணி ராணி சீரியலில் நடித்த விக்னேஷ் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஹரிபிரியாவை திருமணம் செய்தது கொண்டார். சில ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து இறுதியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.

ஜெயஸ்ரீ – ஈஸ்வர்

eswar-updatenews360

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் மகாலஷ்மி உடன் தொடர்பில் இருப்பதாக இருவரும் விவகாரத்தை பெற்ற பிரதமர் ஆனால் மகாலட்சுமி தற்போது தயாரிப்பாளர் ரவீந்திரநாத் திருமணம் செய்து கொண்டது தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!