சஞ்சீவ் – ஆல்யா மானசா வீட்டில் இத்தனை கார்களா? வாய்பிளக்கும் ரசிகர்கள்..!
Author: Rajesh2 April 2022, 1:07 pm
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி. இவர்கள் சின்னத்திரையின் நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான், இரண்டாவது குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சஞ்சீவ் தனது மனைவிக்காக புதிய காரை பரிசளித்தது குறித்து தனது இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்னர் ஆல்யா மானசா முதல் முறையாக கர்ப்பமாக இருந்த போது அவருக்கு பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்தார். அதன்பிறகு அய்லாவின் முதல் பிறந்தநாளுக்கு சில நாட்கள் இருக்கும் போது, விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் ஆல்யாவுக்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக மேடையிலேயே வழங்கினார்.

தற்போது மீண்டும் பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதற்கு நடுவே இவர்கள் கியா கார்னிவல் கார் ஒன்றையும் சமீபத்தில் வாங்கியுள்ளனர். தற்போது இவர்களின் கார் கலெக்ஷன் தான் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.