ஆண்களே இப்படி தானா? அப்பாவை கூட புடிக்கல.. ஸ்வேதா சுப்ரமணியன் வேதனை..!

Author: Vignesh
16 September 2023, 4:30 pm

கனாக்காணும் காலங்கள் தொடர் மூலமாக நடிகையானவர்தான் ஸ்வேதா சுப்பிரமணியன். இவர் கார்த்திகை பெண்கள், அழகி, சின்னத்தம்பி உள்ளிட்ட முக்கிய தொடர்களை நடித்திருக்கிறார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும்போது கார்ல பாட்டு கேட்டுகிட்டே கடற்கரைக்கு போயிடுவேன்.

Swetha Subramanian - updatenewse360

வாழ்க்கையில நான் ரொம்ப உடைஞ்சு போயிருந்தேன். என் வாழ்க்கை வேற மாதிரி ஆகும். ஒரு குடும்பம், சாதாரண வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனா ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சிச்சு மற்றவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவு நடக்கும் போது அது எனக்கு வழியாக இருக்கும்.

இப்படி கூட பல மனிதர்கள் இருப்பார்களா? அப்படின்னு எனக்குள்ளேயே நான் கேள்வி கேட்டுப்பேன். கோபம் வரும் எனக்கு இது நடக்கும்போது என்னால், ஜீரணிக்கவே முடியல. என்னால வெளில சொல்ல முடியல.. சொல்லாமல் இருக்க முடியல.. என்ன ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.

Swetha Subramanian - updatenewse360

வெளிப்படையா என்னால பேச முடியல, சோசியல் மீடியாவுல கூட நான் இல்லாம இருந்தேன். என்னைக்காவது ஒருநாள் என் வாழ்க்கை மாறாதான்னு காத்திருந்து மூன்று வருஷம் ஓடிருச்சு… என் மார்பு என் கண்கள் எல்லாமே பிரச்சனையானது. ஒவ்வொரு முறை டாக்டரிடம் போய் நிற்கும்போது அவமானமா இருந்துச்சு. இது எல்லாமே ஸ்ட்ரெஸ் தான் காரணம்.

Swetha Subramanian - updatenewse360

வெயிட் வேற போட்டுருச்சு.. அதனால வாய்ப்பு வரவில்லை. இப்படி பல பிரச்சினைகள் எனக்குள்ள இருந்துச்சு, கோவிலுக்கு எல்லாம் போயிட்டு எல்லா பிரச்சினையிலும் சரி பண்னேன். ஒரு கட்டத்துல ஆண்களே, இப்படி தானானு தோனுச்சு… அப்பாவ கூட வெறுக்க தொடங்கினேன். ஆனால், எல்லா ஆண்களும் இப்படி இல்ல.. சில நல்லவங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பலரால், ஏமாற்றப்பட்டு நான் பலரால் வருத்தப்பட்டு இருக்கேன். அதுக்கு காரணம் நான் சந்தித்த வலியும் வேதனையும் தான் என்று தெரிவித்துள்ளார்.

  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 253

    0

    0