சின்னத்திரையிலும் பாலியல் சீண்டல்…பிரபல நடிகரின் மகள் சீரியலில் இருந்து விலகல்!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2025, 5:40 pm
பெரிய திரைகள் மட்டுமல்ல ஒவ்வொரு துறையிலும் பாலியல் சீண்டல், அட்ஜஸ்மென்ட் என்பது உள்ளது என பல பெண்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகர் லிவ்விங்கஸ்டன் மகள் ஜோவிதா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மௌனம் பேசியதே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. சமந்தா பாணியில் பதிவு போட்டதால் சர்ச்சை!
இது குறித்து ஜோவிதா தனது பதிவில், கலாச்சாரத்திற்கு எதிரான கதாபாத்திரம், சுயநலமான ஒரு கதாபாத்திரம், இத்தனை நாட்களாக இந்த சீரியலில் நடித்தது எனக்கு கஷ்டமாக இருந்ததால் விலகுகிறேன் என கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து பேசிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், சினிமாவை விட்டு விலகி வேறு தொழில் செய்ய விரும்புகிறேன் என ஜோவிதா அவருடைய பதிவில் கூறியுள்ளார்.
சொல்ல முடியாத சில தொந்தரவு உள்ளது என குறிப்பிட்டிருந்தார். அவர் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. ஒரு வேளை அவருக்கு பாலியல் சீண்டல் நடந்ததா? சொல்லாமல் மறைக்கிறாரா? சின்னத்திரையில் பல சீரியலர்களில் அவர் நடிக்க வேண்டியதுள்ளதால், அவர் அது குறித்து மறைத்துள்ளார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.