பாலியல் தொல்லை: அப்படி பண்ண சொல்லி டார்ச்சர் செய்தார் – ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் புகார்!

Author:
16 September 2024, 7:48 pm

சினிமா துறையில் நடிகைகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தும் இளம்பெண்களுக்கு சினிமாக்காரர்களால் ஏற்படும் பாலியல் டார்ச்சர்கள் குறித்தும் தொடர்ந்து பல செய்திகள் வெளியாகி அதிர்ச்சிக்குரிய வகையில் அதன் உண்மை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது .

hema-commision

குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோம்? தங்களது மோசமான கசப்பான அனுபவங்களை குறித்து பொதுவெளியில் வந்து சமீப நாட்களாக வெளிப்படையாக கூறுகிறார்கள். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காத பாடலுக்கு தேசிய விருது பெற்ற பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆன ஜானி மாஸ்டர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் .

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது. தான் ஹைதராபாத் மற்றும் சென்னை மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சூட்டிங் சென்ற போது பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக கூறி இருக்கும் அவர். நரசிங்கியில் உள்ள தன்னுடைய வீட்டில் அவரது வீட்டில் தான் தங்கிய போது தன்னை பலமுறை தாக்கியதாகவும் தொடர்ந்து தனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் தன்னை வலுக்கட்டாயமாக மதம் மாற்ற ஜானி மாஸ்டர் முயற்சித்ததாகவும் அந்த பெண் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஜாக்கெட்டே போடலயா? ஓணம் புடவையில் மாதிரி இழுக்கும் அனிகா சுரேந்திரன்!

இதை அடுத்து இந்த வழக்கு வேறு ஒரு கோணத்திற்கு திசை திருப்பப்பட்டு இருக்கிறது. ஜானி மாஸ்டர் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடன் நடன கலைஞராக பணியாற்றி வந்த சதீஸ் என்பவரை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக புகார் கொடுத்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 மாதங்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!