குக் வித் கோமாளியில் வெளியேற்றப்பட்ட ஜோயா… கண்கலங்கி சொன்ன உருக்கமான வார்த்தை!

Author:
29 July 2024, 10:17 am

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்கப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு தனது குழந்தைத்தனமான சுபாவத்தால் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக பார்க்கப்பட்டவர் தான் “ஷாலின் ஜோயா” இவர் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதற்கான காரணம்.. இந்த வாரம் இவர் செய்த சமையல் நடுவர்களை கவரவில்லை எனக் கூறி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது கண்கலங்கி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதாவது,” நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. ஆனாலும், நடுவர்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு இந்த நிகழ்ச்சி தான் மிகப்பெரிய அளவில் பிரபலத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது.

எங்க அம்மாவிற்கு நான் புடவை கட்டி கையில் வளையல் அணிந்து இந்த நிகழ்ச்சியில் வரவேண்டும் என ரொம்பவே ஆசைப்பட்டு இருந்தாங்க. அவங்க நினைச்சது மாதிரி இந்த வாரம் நான் வந்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது ஜோயா தன்னை அறியாமல் அழுது விடுகிறார். பின்னர் அவரை சக போட்டியாளர்கள் கட்டியணைத்து ஆறுதல் சொல்லி பிரியா விடை கொடுத்தார்கள். ஜோயா இல்லாமல் நிகழ்ச்சி பார்க்க முடியாது என அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!