ஆனா ஊனா சண்டை போடாம “அவரை பார்த்து கத்துக்கோங்க”.. அஜித்தால் பல முறை மனைவியிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகர்..!
Author: Vignesh14 January 2023, 1:30 pm
9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது.
துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு படம் உலகளவில் ரூ.26 கோடி வசூலித்து நூலிழையில் முதல் இடத்தை நழுவவிட்டது.
இந்த நிலையில், வாரிசு படத்தில் விஜயின் அண்ணாவாக முக்கிய ரோலில் நடித்திருந்த நடிகர் ஷாமின் குழந்தைகளும், அஜித்தின் குழந்தைகளும் ஒரே பள்ளியில் தான் படித்து வருகிறார்கள்.
அப்போது நடிகர் ஷாமின் மனைவி பள்ளி விழாவிற்கு சென்ற நேரத்தில் அஜித் தன் மகளுக்காக அங்கு வந்திருந்ததை பார்த்த ஷாமின் மனைவி ஷாமிற்கு போன் செய்து, பிஸியாக நடிக்கும் அஜித் சார் கூட தன் குழந்தைகளுக்காக பள்ளிக்கு வந்துள்ளார் என்று கடிந்து கொண்டதாகவும், ஆனால் நீங்கள் ஒருமுறை கூட நம் குழந்தைகளுக்காக வந்ததில்லை என்று கடுமையாக திட்டிவிட்டாராம்.
இதனால் அடுத்து முறை பள்ளி விழாவிற்கு நடிகர் ஷாம் சென்றுள்ளார். அப்போது நடிகர் அஜித் வருவதை பார்த்து ஷாக் ஆகி அஜித்திடம் பேசிய ஷாம், ” எப்படி அண்ணா பிஸியாக இருக்கும் நீங்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறீர்கள்? என கேள்வி கேட்டதற்கு, ” நமக்கு குடும்பம் தான் முக்கியம் என சாதாரணமாக அஜித் கூறினாராம்.
அன்று முதல் ஷாம் இன்று வரை தன் குழந்தைகளின் பள்ளி விழாவிற்கு நடிகர் ஷாமின் அடிக்கடி சென்று வருவதாக தெரிவித்துள்ளார்.