நடுக்கடலில் ஷாருக்கானை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்த நயன்? ‘ஜவான்’ Romance காட்சி லீக்!

Author: Shree
13 April 2023, 3:57 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டது. இப்படம் வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க அட்லீ அழைத்திருந்தார். ஆனால் அவர் லியோ படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுன் அந்த ரோலில் நடிக்கிறார்.

இப்படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று நடுக்கடலில் படகில் படம் பிடித்துள்ளனர். அதன் காட்சிகள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. அதில் நயன்தாரா ஷாரூக்கானுடன் நெருக்கமான கட்டியணைத்து ரொமான்ஸ் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 742

    10

    1