தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் நடிகர் விஜய் வெளிநாடுகளில் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால் தமிழகத்தில் தான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. அதாவது, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவிற்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஆடியோ வெளியிட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எனினும், ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி அப்டேட்டை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆடியோ வெளியீடு நடக்காததற்கு காரணம் பலர் நினைப்பது போல் இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல என்று இவ்வாறு x தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஆடியோ லான்ச் ரத்திற்கு காரணம் இது தான் என்று செய்திகள் சமூகவலைதங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, சில நாட்களுக்கு முன்னர் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் “நடிகர் விஜய்யின் லியோ படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று ஆளும்கட்சி தரப்பு நடிகர் விஜய் மிரட்டி வருவதாக பதிவிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்தாகியுள்ளது. எனவே சவுக்கு ஷங்கர் சொன்னது அனைத்தும் உண்மை தான் போல உதயநிதியை பார்த்து விஜய் பயந்து இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளாரோ?என சந்தேகத்தை வரவைக்கிறது. சினிமாவில் கூட அரசியல் தாண்டவமாடுகிறது. சினிமா அரசியலை சமாளிக்கவே திணறும் விஜய் எப்படி முழு நேர அரசியலில் ஈடுபடமுடியும் என பலர் விமர்சித்துள்ளனர்.
எனவே லியோ படம் ரீஸுக்கு முன்னரே ஏகப்பட்ட பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்தித்து வருவதால் இப்படம் வசூல் ரீதியாக சறுக்கலை சந்தித்து விடுமோ என விநியோகிஸ்தர்கள் அஞ்சியுள்ளனர். ஆனால், விஜய்யின் படங்கள் சர்ச்சையில் சிக்கினால் அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துவிடும் என்பது தான் எல்லோரது நம்பிக்கையாக உள்ளது. எனவே சர்ச்சைகள் மூலம் லியோ படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்து வருகிறது.
இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. ஜவான் படத்தின் இந்த வெற்றிக்கு ஜயின் ரசிகர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான், விஜயின் அடுத்த திரைப்படத்திற்காக ஆர்வமுடன் காத்திருப்பதாகவும், I love Vijay sir! என்றும் கூறியிருந்தார்.
இதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த விஜய் ஷாருக்கான், அட்லியைப் பாராட்டி ஒட்டுமொத்த ஜவான் குழுவிற்கும் பாராட்டு தெரிவித்து, ‘ஐ லவ் யூ ஷாருக்கான் சார்’ எனக் கூறி ரிப்ளை செய்தார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.