பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார்.
தொடர்ந்து பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அதையடுத்து தற்போது ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் Dunki என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நாடரில் நடைபெற்று வருகிறதாம். அப்போது ஸ்டண்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டு ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம்.
குறிப்பாக ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் பதறிப்போன படக்குழு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை கொடுத்துள்ளனர்.
தீவிர சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பியுள்ள ஷாருக் கான் தற்போது நலமுடன் இருப்பதாகவும், காயம் சரியானதும் விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷயம் அறிந்து பாலிவுட் சினிமா வட்டாரமே மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளதாம். மேலும் ஷாருக்கான் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
This website uses cookies.