அந்த வார்த்தை சொல்லி இருக்க கூடாது.. ராம் சரணை அசிங்கப்படுத்திய ஷாருக்கான்?.. (வீடியோ)
Author: Vignesh5 March 2024, 7:32 pm
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.
ராதிகா மெர்ச்சந்த் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை இந்த Pre Wedding கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ரஜினிகாந்த், ராம்சரண் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். RRR படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் நடனம் ஆடினார்கள். அப்போது, ஷாருக்கான் இட்லி, வடை, சாம்பார் மேடைக்கு வாருங்கள் என்று ராம்சரனை அழைத்துள்ளார்.
இந்த நிலையில், ராம்சரனின் ஒப்பனை கலைஞர் ஜெபஹாசன் நடிகர் ஷாருக்கான் ராம்சரணை இட்லி,வடை, சாம்பார் என்று அழைத்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. அது அவமரியாதையாக நான் கருதுகிறேன். நான் சிறிது நேரம் கழித்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். நான் ராம்சரனின் ரசிகர் என்று பதிவிட்டு இருந்தார். தற்போது, சமூக வலைதளத்தில் ராம்சரனின் ரசிகர்கள் நடிகர் ஷாருக்கானை திட்டி வருவது குறிப்பிடத்தக்கது. சிலர் ஷாருக்கான ஆதரவாகவும் இது குறித்து கருத்துக்களை பதிவிட்டு செய்து வருகிறார்கள்.
Idli is not funny, same as Vada Pav or Vimal.
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) March 5, 2024
Stereotypical Racism disguised as fun and camaraderie is not welcome.#AnantRadhikaPreWedding pic.twitter.com/nubsz7G0Ig