பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான ஷாருக்கான் தற்போது அங்கு தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் லயன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க கிட்டத்தட்ட ரூ.250 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார் நடிகர் ஷாருக்கான்.
இவ்வளவு சம்பளம் வாங்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் வகையில் தான் படும் கஷ்டங்களையும் தனது உழைப்பையும் பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நான் ஒரு வேலை மட்டும் தான் சாப்பிடுவேன். அது மட்டும் இல்லாமல் சூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு அதிகாலை 2 மணிக்கு தான் வருவேன். வீட்டுக்கு வந்ததும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஒர்க் அவுட் செய்வேன். பிறகு காலை 5 மணி அளவில் தான் நான் தூங்கவே செல்வேன்.
தினமும் ஒருவேளை தான் நான் சாப்பாடு சாப்பிடுவேன். அது என்னுடைய விருப்பம் தான். உடல் எடை. மெயின்டைன் செய்வதற்காக நான் அப்படி செய்வேன். கிட்டத்தட்ட 58 வயசு ஆகும் நடிகர் ஷாருக்கான் தற்போது வரை புகழின் உச்சத்தில் இருப்பதற்கு இவ்வளவு மெனக்கெடுக்கிறாரா என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.