ஷாருக்கான் சொல்லி மகனுக்கு பெயர் வைத்த அட்லீ…. என்ன ஒரு விஸ்வாசம்… இதை கவனிச்சீங்களா?!!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2023, 8:08 pm
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அட்லீ ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.
நண்பன் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த போது அவர் மீது நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட நம்பிக்கை தெறி பட வாய்ப்பை அவருக்கு கிடைக்க வைத்தது.
தெறி படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்த நிலையில், இயக்குநர் அட்லீக்கு அடுத்தடுத்த படங்களை கொடுத்தார் விஜய்
விஜய் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், மும்பைக்கு பறந்த அட்லீ, எத்தனை ஆண்டுகள் தாமதம் ஆனாலும், சரி ஷாருக்கான் படத்தை முடித்து விட்டுத் தான் அடுத்த படத்தை ஆரம்பிக்கணும் என பொறுமையாக காத்திருந்த நிலையில், ஜவான் படத்தின் இறுதிக்கட்டத்தை தற்போது எட்டி உள்ளார்.
ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடி வந்த ஷாருக்கான் அட்லீ இதுவரை வெளியிடாமல் இருந்த அவரது மகனின் பெயரை ஷாருக்கான் ரிவீல் செய்து விட்டார்.
ஷாருக்கான் ட்வீட் போட்ட நிலையில், தற்போது அட்லீயின் மனைவி பிரியா அட்லீயும் ட்விட்டர் பக்கத்தில் ஆம் என் மகன் பெயர் ‘மீர்’ தான் என அவரும் அதிகாரப்பூர்வமாக தனது குழந்தையின் பெயரை அறிவித்து விட்டார்.
Yes the name is Meer
— atlee (@Atlee_dir) May 7, 2023
Need all ur love ,blessing and prayers https://t.co/ht4YIOj7ib
இந்நிலையில், ஷாருக்கானின் தந்தையின் பெயரான மீர் தாஜ் முகமது கான் என்கிற பெயரில் இருந்து மீர் என்கிற பெயரை எடுத்து அட்லீ தனது மகனுக்கு சூட்டியிருக்காரே என ரசிகர்கள் கண்டு பிடித்து கமெண்ட் போட்டு வருகின்றனர். மீர் என்றால் தலைவன், கடல் என்கிற பொருள் வருவதாக கூறுகின்றனர்.