மகளை டேட் செய்ய ஷாருக்கான் போட்டிருக்கும் 7 ரூல்ஸ்.. பயங்கரமான ஆளா இருக்காரே..!

Author: Vignesh
24 May 2024, 6:27 pm

பாலிவுட் இன் பாஷா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதும் அவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக்கான் இன்றும் ஹிந்தியில் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க: வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம்.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சகிலா..! (Video)

அது மட்டுமில்லாமல் உலகத்தில் செல்வம் மிகுந்த நபர்களின் பட்டியலில் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

shahrukh daughter

மேலும் படிக்க: அடுத்த டார்கெட் SUPER STAR… கனவு மற்றும் ஆசை குறித்து சூசகமாக தெரிவித்த தனுஷ்..!(Video)

அதாவது, தனது மகளை யாராவது டேட் செய்தால் அவர்களுக்கு ஏழு ரூல்ஸ் இருக்கிறது என்று ஷாருக்கான் பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அதில் வேலை இருக்கணும், உனக்கு என்னை பிடிக்காது என்பதை புரிந்து கொள், நான் எல்லா இடத்திலும் இருப்பேன், ஒரு வக்கீலை வைத்துக் கொள், சுகானா என் பிரின்சஸ், நான் ஜெயிலுக்கு திரும்பி செல்ல தயங்க மாட்டேன், நீ சுகானாவுக்கு என்ன செய்தாலும் அதை உனக்கு திருப்பி செய்வேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், அதன்பின் மகள் வாழ்வில் காதல் வந்தால் ரூல்ஸ் போடாமல் ஏற்க வேண்டி இருக்கும் என்பதை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது, சுகானா பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தாவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!