‘மதராஸி’ படத்தில் நடிக்க இருந்த பாலிவுட் நடிகர்..விலகியதற்கான காரணத்தை கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்.!
Author: Selvan24 March 2025, 10:03 pm
ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக்
அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்க: பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ஆசையா..வெளிவந்த அப்டேட்டால் ரசிகர்கள் குஷி.!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இப்படம்,சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக உருவாகிறது.
மதராஸி திரைப்படத்திற்கான கதையை முதலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானிடம் சொல்லியதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பட விழாவில் பங்கேற்று பேசிய அவர் “சில வருடங்களுக்கு முன்பு மதராஸி கதையை ஷாருக் கானிடம் கூறினேன்.பாதி கதையை கேட்டுவிட்டு அவர் ‘ஓகே’ என்றார். ஆனால்,ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பேசும் போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.அதன்பிறகு, இந்தக் கதையை விரிவுபடுத்தி சிவகார்த்திகேயனிடம் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால் உடனே ஒப்புக்கொண்டார்.”
இப்படம் ஒரு ஆக்சன் கலந்த படமாக உருவாகி வருவதால் சிவகார்த்திகேயன் கரியரில் முக்கிய படமாக இருக்கும் என கருதப்படுகிறது.