Girlfriend’க்கு ஓசி டிக்கெட் கிடைக்குமா? ரசிகரின் கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த ஷாருக்கான்!

Author: Shree
4 September 2023, 7:43 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் முன்பதிவிற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ஷாரூக்கானிடம் ரசிகர் ஒருவரும், தன்னுடைய காதலிக்கு free டிக்கெட் கிடைக்குமா என கேட்க, அதற்கு பதிலடி கொடுத்த ஷாருக்,

“ரொமான்ஸ் செய்யும்பொழுது இப்படி Cheapஆக நடந்து கொள்ளக் கூடாது. எனவே டிக்கெட் வாங்கி உங்களுடைய பெண் தோழியை கூட அழைத்து சென்று படத்தை பார்த்து ரசியுங்கள் என்று நெத்தியடி பதில் கூறியுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…