இரண்டாவது குழந்தை பெத்துக்கலாம்… அட்லீ மனைவியிடம் அத்துமீறிய ஷாருக்கான் – முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!

Author: Shree
31 August 2023, 12:47 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இவ்விழாவில் படக்குழுவினர், கல்லூரி மாணவர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் உள்ளிட்ட லட்ச கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் ஷாருக்கான், வணக்கம்… இந்த மாதிரி ரசிகர்கள் கரகோஷத்துடன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என் வாழ்வில் இதுவே முதல் முறை. தமிழ் சினிமாவில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் அபார திறமை பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். என பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மேடைக்கு முன் வரிசையில் அமர்ந்துக்கொண்டிருந்த அட்லீயின் மனைவி பிரியாவை பார்த்து, பிரியா நான் உங்களுக்கு தனியாக நன்றி சொல்கிறேன்.

நாம் இன்னொரு குழந்தையை produce செய்யலாம்… நம்ம ரெண்டு பேரும் இல்ல… நீங்களும் அட்லீயும் சேர்ந்து தான்… என்றார். உடனே பிரியா விழுந்து விழுந்து சிரிக்க அங்கிருந்தவர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள். பின்னர் மீண்டும் பேசிய ஷாருக்கான், நான் கோ புரொட்யூஸ் செய்கிறேன். நம்ம நண்பர்கள் தானே அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என அவர் பேசியது முகம் சுளிக்க வைத்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாக…. வடக்கன்களையெல்லாம் வச்சி படமெடுத்தால் இப்படி தான் சமூகத்தை சீரழிப்பார்கள் என சர்ச்சை கிளப்பியுள்ளனர். இதோ அந்த வீடியோ:

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!