தம்பி… நயன்தாராவிடம் ஜாக்கிரதையா இரு – விக்னேஷ் சிவனுக்கு வார்னிங் கொடுத்த ஷாருக்கான்!

Author: Shree
13 July 2023, 12:13 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க அட்லீ அழைத்திருந்தார். ஆனால் அவர் லியோ படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுன் அந்த ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் இப்படத்தில் ப்ரிவ்யூ வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது. அதில் நயன்தாரா செம மாஸாக என்ட்ரி கொடுத்திருந்தார்.

nayanthara

இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்து மெர்சலான விக்னேஷ் சிவன், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்து கூறியிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த நடிகர் ஷாருக்கான், உங்கள் அன்புக்கு நன்றி விக்னேஷ் சிவன். நயன்தாரா மிகவும் அருமையானவர்.ஆனால், தற்போது அவர் நடிக்கவும் உதைக்கவும் கற்றுக்கொண்டுள்ளார்.

எனவே கணவராக நீங்க அவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், ஏற்கனவே உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என கூறியிருக்கிறார்.இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த விக்னேஷ் சிவன், ஆமாம் ஜாக்கிரதையாக தான் இருக்கிறேன் சார். அதே நேரத்தில், படத்தில் உங்கள் இருவருக்கும் இடையே நல்ல காதல் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன், எனவே நயன் காதல் மன்னனிடம் இருந்து ரொமான்ஸ் கற்றுக்கொண்டாள் என்று பதில் அளித்துள்ளார். இவர்களின் இந்த ஜாலியான உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!