விஜய் பட நடிகை ரிச்சாவா இது?..- குழந்தையும் குட்டியுமா இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க..!

Author: Vignesh
10 April 2023, 5:30 pm

ரிச்சா பல்லோட் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். ஹிந்தி மட்டுமின்றி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிப் படங்களிலும் நடித்து உள்ளார். லாம்ஹே (1991) படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி பிறகு, தெலுங்கில் தனது முதல் படமான நுவ்வே கவாலி (2000) இல் விருது பெற்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இதனையடுத்து, யாஷ் ராஜ் பிலிம்ஸ் ‘நீல்’என்’ நிக்கி (2005) அவரது மிகவும் குறிப்பிடத்தக்க இந்தி திரைப்படம் ஆகும்.

richa pallod-updatenews360

மேலும், ஷாஜஹான் (2001) மற்றும் உனக்கும் எனக்கும் (2006) காதல் கிருக்கன், ஆகிய தமிழ் படங்களில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் விஜய் நடித்த காதல் சம்பந்தப்பட்ட படங்களில் ஒன்று ஷாஜகான். இது கே.எஸ்.ரவி இயக்கத்தில் விஜய், ரிச்சா ஜோடியாக நடித்து இருந்தனர்.

richa pallod-updatenews360

பின்னர், மணி ஷர்மா இசையமைப்பில் ஷாஜஹான் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் தான். இதில் விஜய்யின் காதல் தோல்வியில் முடிந்தது போல் காட்டினாலும் அவருக்கு ஜோடியாக ரிச்சா சில காட்சிகள் நடித்து இருப்பார்.

இந்நிலையில், தற்போது நடிகை ரிச்சா பலோட் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

richa pallod-updatenews360

இதனைப் பார்த்த ரசிகர்கள் அட ஷாஜகான் பட நடிகை ரிச்சாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறார என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

richa pallod-updatenews360
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!