கிழிந்த மேலாடை… மானமே போச்சு.. 300 பேருக்கு முன்னாடி நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த 90களின் கனவுக்கன்னி!

Author: Vignesh
7 March 2024, 5:54 pm

பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது.

டாப் நாயகர்களின் படம் ரிலீஸ் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.

இதனால் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷகீலா கடந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கேமரா பக்கம் வந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார்.

shakeela- updatenews360

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடையை கவர்ச்சிக்கரமான பிம்பத்தை உடைத்தெரிந்தார். நடிகை ஷகீலா இந்நிகழ்ச்சிக்கு பின் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றார். சமீபகாலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சில பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டும் வரும் நடிகை ஷகீலா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றி, படத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பேசி இருந்தார். அதில், நடிகை சில்க் ஸ்மிதா நடித்த ஒரு படத்தில் தான் நான் சினிமாவில் அறிமுகமானேன்.

அந்த சமயத்தில் தனக்கு 16 வயது தான். அப்படத்தில் வரும் ஒரு காட்சியில் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என்னுடன் எனது தங்கையும் அப்படத்தில் நடித்திருந்தார். அவரும் என்னை தொடர்ந்து நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் எங்கள் இருவருக்குமே நீச்சல் சுத்தமா தெரியாது. முதலில், நான் நீச்சல் குளத்தில் குதித்து விட்டேன் என்னை தொடர்ந்து எனது தங்கையும் குதித்தார்.

Shakeela

அவர் குதித்த, போது தங்கை உடனடியாக மேலே வந்து விட்டார். என்னால், மேலே வர முடியவில்லை. அப்போது, படப்பிடிப்பிலிருந்த ஒரு நபர் உடனடியாக நீச்சல் குளத்தில் குதித்து என்னை மேலே கொண்டு வந்தார். அந்த சமயத்தில், நான் அணிந்திருந்த பிகினி உடையின் மேலாடை கிழிந்து விட்டது. நான் தண்ணீரில் இருந்து மேலே வரும்போது, என்னிடம் வேறு மேலாடை இல்லை.

shakila

அந்த சம்பவம் நடந்த நேரத்தில், பக்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதனால், படப்பிடிப்பில் கிட்டதட்ட 300 பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் என்னை பார்த்தார்கள். எனக்கு மிகவும் அவமானம் ஆகிவிட்டது. அப்போது, திடீரென்று யாரோ ஒருவர் அந்த கூட்டத்திலிருந்து ஒரு துணியை தூக்கி என் மேல் வீசினார். ரூமுக்கு உடனடியாக நான் ஓடி விட்டேன். அந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று நடிகை ஷகீலா பேசியுள்ளார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 249

    0

    0