நைட்ல அது பண்ணாதான் தூக்கமே வரும்.. நடிகை ஷகீலா ஓபன் டாக்..!

Author: Vignesh
14 November 2023, 10:30 am

பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது.

டாப் நாயகர்களின் படம் ரிலீஸ் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.

இதனால் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷகீலா கடந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கேமரா பக்கம் வந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடையை கவர்ச்சிக்கரமான பிம்பத்தை உடைத்தெரிந்தார்.

நடிகை ஷகீலா இந்நிகழ்ச்சிக்கு பின் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றார். சமீபகாலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சில பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டும் வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 ல் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணத்திற்காக எலிமினேட் செய்யப்பட்டார். இது குறித்து சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசுகையில், நான் செய்த தவற்றை இல்லை என்று கூறுவதால் எனக்கு என்ன நடக்கப்போகிறது.

நான் செய்ததை ஆமா நான் தான் செய்தேன் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த வித பயமும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், நான் 13 வயதில் நடிக்க ஆரம்பித்து பணம் சம்பாதித்ததால் ஒரு இறுமாப்பு வந்துவிட்டது. அதனால், இன்னொரு நபரின் துணை வேண்டாம் என்று நினைத்து நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

எல்லாத்துக்கும் மேலாக எனக்கு மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததால் தான் திருமணத்தை வேண்டவே வேண்டாம் என்ற முடிவெடுத்து விட்டேன். சாதாரணமாக ஆரம்பித்த அந்த பழக்கம் என்னை தற்போது அடிமையாக்கி விட்டது. தூங்கும் முன் மது அருந்தினால் தான் எனக்கு தூக்கமே வரும் தள்ளப்பட்டு விட்டேன். இப்படி இந்த கெட்ட பழக்கம் இருக்கும் போது திருமணம் செய்து இன்னொருவரின் வாழ்க்கையை கெடுத்து மகிழ்ச்சியை கெடுத்து இதனால் எதற்கு இதை செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்தேன் என்று நடிகை ஷகீலா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 328

    0

    0