‘அப்போ என்னைய உள்ளயே விடல, ஆனா இப்போ’: சிவன் கோயிலில் உருக்கமாக பேசிய ஷகிலா..!
Author: Rajesh26 February 2023, 3:30 pm
பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழியில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கவர்ச்சி திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமானார் என்றாலும் காமெடி மற்றும் சில செண்டிமெண்ட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். டாப் நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.
கடந்த சில வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த ஷகீலா, 2014ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர், குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் அடைந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஷகீலா பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதுபோக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ஆங்கராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தான் கவர்ச்சி நடிகை என்ற ஒரே காரணத்துக்காக பொது இடத்தில் புறக்கணிக்கப்பட்டது குறித்து ஷகிலா மனம் திறந்து பேசியுள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஷகிலாவை, வணிக வளாக நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சியையும் அவர்கள் ரத்து செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு காரணத்துக்காகவே அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததாக வணிக வளாக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.
இந்நிலையில், கேரளா எர்ணாகுளத்தில் உள்ள தைகட்டு ஸ்ரீ மகாதேவா கோயில் நிகழ்ச்சியில் ஷகிலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நான் இங்கே சிறப்பு விருந்தினராக வந்திருப்பது கடவுளால் திட்டமிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான் கடந்த முறை கேரளா வந்த போது வணிக வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திரும்பிச் சென்றேன். ஆனால், கடவுள் எனக்காக வேறு திட்டங்கள் வைத்திருந்ததை நான் இப்போது உணர்ந்து கொண்டேன். வணிக வளாகத்தில் என்னைப் பார்க்க 200, 300 பேர் வந்திருந்தனர். ஆனால் இங்கே என்னை 1000 கண்கள் பார்த்துக்கொண்டிருப்பதை காண்கிறேன் என மிக உருக்கமாக பேசியுள்ளார்.