நான் கர்ப்பமானதே தெரியல… சிறு வயதிலே கருக்கலைப்பு செய்த ஷகிலா!
Author: Shree15 September 2023, 4:55 pm
ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. இவர் மோசமான படுக்கையறை காட்சிகள் கவர்ச்சி நடனம் என தமிழ் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.
அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” நான் சிறு வயதாக இருக்கும்போதே காதலனுடன் தகாத உறவு கொண்டு கர்ப்பமாகிவிட்டேன். நான் கர்ப்பம் ஆனதே எனக்கு தெரியாது. அப்போதெல்லாம் எனக்கு irregular periods அதனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை. பின்னர் என் வயிறு பெரியதாக இருப்பதை பார்த்து என் அம்மா தான் கண்டுபிடித்தார். பின்னர் டாக்டரிடம் கூட்டிச்சென்று கருக்கலைப்பு செய்துவிட்டார். எனக்கு அப்போது அந்த முடிவு சரி என்று தான் தோன்றியது. ஏனென்றால். அப்போ நான் ரொம்ப சின்ன பொண்ணு. அம்மாவும் குழந்தையெல்லாம் இப்போ வேண்டாம்னு சொல்லிட்டாங்க என வெளிப்படையாக கூறினார்.