ஒன்னே ஒன்னு தான் எக்ஸ்ட்ரா போட்டேன்… தூக்கி அடிச்சிட்டு போய்ட்டான் – விட்டுச்சென்ற காதலன் குறித்து ஷகிலா!
Author: Rajesh13 December 2023, 6:58 pm
ஐட்டம் நடிகை, ஆபாச நடிகை என மிகவும் கொச்சையான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என தமிழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.
அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முன்னாள் காதலனை பிரிந்ததற்கான காரணத்தை குறித்து பேசினார். அப்போது, ஒரு முறை நான் என் காதலனுக்கு விருந்து வைத்தபோது சட்னியில் கொஞ்சம் காரம் அதிகமாகிவிட்டது. ஒரே ஒரு பச்சை மிளகாய் எக்ஸ்ட்ராவா போட்டுவிட்டேன். அதற்காக அவர் கோபப்பட்டு தட்டை தூக்கி வீசி எறிந்துவிட்டார்.
அவருக்கு காரம் சுத்தமாக பிடிக்காது. ஆனால் எனக்கு காரசாரமான உணவு தான் மிகவும் பிடிக்கும். அதன் பின்னர் சில பிரச்சனையால் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். அவர் அமெரிக்காவில் ஐடி ஊழியர் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இப்போதும் நாங்கள் பேசுவோம்.
அப்படி ஒருமுறை எனக்கு போன் செய்தபோது அவர் மனைவி அவரை மரியாதை குறைவாக அவன் , இவன் என பேசியதோடு மட்டும் அல்லாமல் இஷ்டத்துக்கும் அவருக்கு பிடிக்காத உணவுகளை சமைத்து கொடுக்கிறார்.
கேட்டால் இப்படி தான் செய்வேன் இஷ்டம் இருந்தால் சாப்பிடு இல்லையென்றால் பட்டினியாக கிட என திட்டுகிறார். அதை கேட்டதும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் ஒரு பச்சை மிளகாய் அதிகமா போட்டதுக்கே தட்டு தூக்கி வீசினவன் தானே நீ உனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும் என நினைத்து சந்தோஷப்பட்டேன் என ஷகிலா அந்த பேட்டியில் கூறினார்.