தமிழில் ஏபிசிடி, பம்பரக்கண்ணாலே, இந்திரலோகத்தில் இரு அழகப்பன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்திருந்த போது வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை வெளிப்படையாக கூறி கண்ணீர் விட்டு அழுத்துள்ளார்.
7 மாதங்களுக்கு முன் சர்க்கரை நோயால் என் கணவர் மரணமடைந்தார். அதுகுறித்து சினிமாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை.
என் மகள் படிப்பிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். கணவர் இருப்பதற்கு முன் நன்றாக இருந்த வாழ்க்கை கணவர் இறந்தப்பின் இல்லை. சாப்பட்டுக்கே நிற்கதியாக நிற்கிறேன் எனவும் தெரிவித்தார்.
அப்பா, மாமனார், கணவர் என்று அடுத்தடுத்த மரணங்கள் பிரேம பிரியாவை தனிமையில் கொண்டு சென்றதாக ஷகீலாவின் சமீபத்திய பேட்டிகள் தெரிவித்துள்ளார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் வடிவேலு தன்னை வளர விடாமல் இந்த நிலைக்கு மாற்றிவிட்டார் என்றும், அவரால் தான் தன் வாழ்க்கையே வீணாகி விட்டதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து, ஷகிலா வடிவேலுவை இப்படி பேசிட்டு அவரிடமிருந்து மிரட்டல் வந்ததா என்று கேட்டுள்ளார்.
அதற்கு, ஒரு நம்பரில் இருந்து மறுப்பு சொல்லி வீடியோ போடணும்னு சொன்னாங்க ஆனா நான் மாட்டேன்னு சொல்லிட்டேன் என பிரேம பிரியா தெரிவித்து இருந்தார். மேலும், இதை ஏன் முன்னாடியே சொல்லல என்று சகிலா கேட்டதற்கு, முன்னாடி மீடியா இதுபோன்று இல்லை. எனக்கும் வடிவேலுக்கும் மீடு பிரச்சினை இல்லையே என்று தெரிவித்துள்ளார்.
இப்ப நீ சொல்றது மீ டு பிரச்சனை இல்லை என்று சொல்லலாம். வடிவேலுவை எனக்கு தெரியும் அவர் என்ன எதிர்பார்ப்பார் என்று எனக்கு தெரியும் என்று ஷகீலா தெரிவித்து இருக்கிறார். மேலும், ஷகிலா வடிவேலு உங்களை ரொம்ப நல்லா தெரியும் இதுபோல் நிறைய பேர் உங்களை பற்றி சொல்கிறார்கள் நீங்கள் எப்படி இந்த இடத்துக்கு வந்தீங்கன்னு தெரியும். நடிக்க முடியாமல் போக சின்ன சின்ன நடிகர்களை வளர விடாமல் தடுத்ததற்கு அனுபவிக்கிறீங்க என்று ஷகிலாவும் தன் பங்குக்கு தெரிவித்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.