அஜித் மச்சானை உயிருக்கு உயிராக காதலித்தேன்… திருமணம் கூட – குண்டு தூக்கி போட்ட ஷகிலா!

Author: Rajesh
10 January 2024, 10:11 am

ஐட்டம் நடிகை, ஆபாச நடிகை என மிகவும் கொச்சையான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என தமிழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.

அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஷகிலா சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முன்னாள் காதலன் அஜித்தின் மச்சான் நடிகர் ரிச்சர்ட் ரிஷி தான் என கூறி பூதாகாரத்தை கிளப்பியுள்ளார். மேலும், அவருடனான உறவு குறித்து பேசிய அவர், 15 வயதாக இருக்கும் போது எனக்கும் ரிஷிக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, காலப்போக்கில் அது காதலாக உருமாறியது.

Richard Rishi

நாங்கள் இருவரும் உருகி உருகி காதலித்தோம்… திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவில் இருந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அதன் பின்னர் பிரச்சனை ஏதும் இல்லாமல் தற்போது வரை நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் என்று ஷகீலா கூறியுள்ளார். நடிகர் ரிச்சர்ட் ரிஷி தற்போது கவர்ச்சி நடிகை யாஷிகாவுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1180

    0

    0