அடச்சீ.. நீ என்ன நடிகையா? .. அசிங்கமா இல்லையா.. கோபத்தில் கொந்தளித்த ஷகீலா..!
Author: Vignesh12 July 2023, 4:26 pm
பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது.
டாப் நாயகர்களின் படம் ரிலீஸ் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.

இதனால் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷகீலா கடந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கேமரா பக்கம் வந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடையை கவர்ச்சிக்கரமான பிம்பத்தை உடைத்தெரிந்தார்.

நடிகை ஷகீலா இந்நிகழ்ச்சிக்கு பின் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றார். சமீபகாலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சில பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டும் வரும் நடிகை ஷகீலா சமீபத்தில் திவ்யா கள்ளச்சி என்பவரை பேட்டி எடுத்து வெளுத்து வாங்கியுள்ளார்.
கார்த்திக் மாமா ஐ லவ் யூ என்று கூறிக்கொண்டு அலைந்து பிரபலமானவர்தான் திவ்யா. இவர் கார்த்திக் என்பவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி டிக் டாக்கில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அந்த வீடியோ வைரலானது.
டிக் டாக் தற்போது இல்லை என்பதால் youtube பக்கம் வந்து அலப்பறை செய்து கொண்டிருக்கும் திவ்யா. இரண்டு மாதத்திற்கு முன், தேனீஸ்வரனை திருமணம் செய்து ஆட்டம் பாட்டத்துடன் இருந்துள்ளார்.
ஏற்கனவே குழந்தை இருக்கும் நிலையில் தேனீஸ்வரனை திருமணம் செய்தது சர்ச்சையானது. ஷகீலா பேட்டியில் கலந்து கொண்ட திவ்யாவிடம் பல கேள்விகளை கேட்டு கடுப்பாகியும் இருக்கிறார்.
கண்டன்டுக்காக தான் அதை செய்தோம் என்றும், தேனீஸ்வரனை பிரபலமாக்க தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைத்து அப்படி நடித்ததாகவும், தன்மேல் கேஸ் இருக்கும்போது தனக்குன்னு யாரும் வரல பணம் தேவைப்பட்டால் தான் இந்த கல்யாண வீடியோவை பண்ணி காசு சம்பாதித்ததாக திவ்யா கூறியுள்ளார்.
இதனிடையே, என்னதான் பொய் சொல்லி வீடியோ போட்டாலும் மக்கள் பார்க்கத்தான் செய்கிறார்கள் என்று திவ்யா பேசியதால் கடுமையாக ஷகிலா திவ்யாவை திட்டியுள்ளார்.
இதை கேட்ட சகிலா அடச்சி நீ என்ன நடிகையா? அசிங்கமா இல்லையா உனக்கு? காசு கொடுத்தா என்ன வேணாலும், பண்ணுவியா என்று சரமாரியாக கேட்டு திவ்யாவை ஒரு வழி செய்து விட்டார். தயவு செய்து வெளியே போ என்னால உன்னோட பேச முடியாது என்று திவ்யா கள்ளச்சியை நடிகை சகிலா வெளியே அனுப்பி விட்டார்.