அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…
Author: Prasad14 April 2025, 4:49 pm
சர்ச்சையை கிளப்பிய வீடியோ
“சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக ஆனவர் ஸ்ருதி நாராயணன். இந்த நிலையில் திடீரென இவரது வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஸ்ருதி நாராயணன் ஆடையின்றி ஒரு ஆணிடம் பேசும் அந்த வீடியோவில் அந்த ஆண் யாரென்று வெளிப்படவில்லை. இதனை தொடர்ந்து ஸ்ருதி நாராயணனின் அந்த வீடியோவில் இருக்கும் ஆண் யார்? அது யாரால் கசியவிடப்பட்டது? என்பது குறித்து கேள்விகள் எழுந்தன.

இது குறித்து ஸ்ருதி நாராயணன் வெளியிட்டிருந்த பதிலில் “அந்த வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ. அது ஒரு ஃபேக் வீடியோ” என கூறியிருந்தார்.
ஸ்ருதி நாராயணன் நடித்த “கட்ஸ்” என்ற திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஸ்ருதி நாராயணன் கலந்துகொண்டபோது பலரும் அவர் அந்த வீடியோவை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அந்த வீடியோ குறித்து விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.
அது ஒரிஜினல் வீடியோதான்…

“அது AI வீடியோ கிடையாது. அது அந்த நடிகை இடம்பெற்ற வீடியோதான். AI என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால் இந்த பெண் மேல் எவ்வளவு தவறு இருக்கிறதோ, அதே போல் அந்த நபர் மீதும் நிறைய தவறு இருக்கிறது. அந்த நபரை பற்றிய எந்த ஒரு தகவலும் ஏன் வெளிவரவில்லை? இது போன்ற நபர்களை காட்டிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் யார் மீது தவறு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்” என ஷகீலா ஸ்ருதி நாராயணன் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.