முதல் கடைசி இரண்டிலும் ஒரே கதாபாத்திரம்; யாரும் அறியாத கதாநாயகியின் மறுபக்கம்

Author: Sudha
4 July 2024, 12:26 pm

தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் தனது முத்திரையை பதித்தவர் நடிகை ஷாலினி. அற்புதமான நடிப்பாலும் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களாலும் ஈர்க்கப்பட்டு ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த நடிகர் அஜித் அவர்களை காதலித்து மணந்து கொண்டார்.அதன் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருக்கிறார். வேறு துறைகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவருடைய நடிப்பில் தமிழில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் காதலுக்கு மரியாதை.1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இந்த திரைப்படம் அனியத்திபிராவு என்னும் பாசில் இயக்கத்தில் வந்த மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்கான அமைந்தது.

இவர் கடைசியாக நடித்த படம் பிரியாத வரம் வேண்டும்.இது 2001 ஆம் ஆண்டு வெளியானது.இது “நிறம்” என்கிற மலையாள திரைபடத்தின் ரீமேக் ஆக அமைந்தது. இரண்டு திரைப்படங்களிலும் ஒரே கதாப் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் ஷாலினி.

வெவ்வேறு மொழிகளில் முதல் படம் கடைசி படம் என இரண்டிலும் ஒரே பாத்திரம் ஏற்று நடித்த நடிகை இவர் மட்டுமே.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?