குழந்தைகள் தினத்தை கொண்டாடிய ஷாலினி அஜித் – கிண்டலுக்குள்ளாகும் பதிவு!

Author: Shree
14 November 2023, 1:21 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். ஷாலினி அஜித்தை ஆரம்ப காலத்தில் பார்த்து பழகியது போல் இன்றும் காதலித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி தனது சகோதரி ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி உடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ரிச்சர்ட், “ஹேப்பி சில்ட்ரன்ஸ் டே… வயசானாலும் நாங்க மூன்று பேரும் குழந்தைகள் தான்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதற்கு நெட்டிசன்ஸ் என்ன அந்த குழந்தைகளுக்கு 40+ இருக்குமா? என கிண்டல் அடித்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 321

    0

    0