2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் பேவரைட் ஹீரோயின்களுள் ஒருவராக இருந்து வந்தவர்தான் நடிகை ஷாலினி. முதன் முதலில் மலையாளத் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு காதலுக்கு மரியாதை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் .
இந்த படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 1997-ல் வெளிவந்த இந்த திரைப்படம் ஷாலினிக்கு மிகப்பெரிய அறிமுக படமாக அமைந்தது. அதை அடுத்து தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் நடித்து வந்தார். பின்னர் அஜித்திற்கு ஜோடியாக அமர்க்களம் திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.
ஷாலினி தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு ,அலைபாயுதே ,பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக. பார்க்கப்பட்டார் இதனிடையே இவர் நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் .
திருமணத்திற்கு பிறகு நடிப்பதையே விட்டுவிட்டார். இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் சமீப நாட்களாக ஆக்டிவாக இருந்து வரும் ஷாலினி தற்போது கணவர் அஜித் , மகன், மகள் என குடும்பத்தினரோடு ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார் நடிகை ஷாலினி.
ஆம், ஸ்பெயின் நாட்டில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் அஜித் தனது குடும்பத்தினரை கூட்டிச் சென்றிருக்கிறாராம். அந்த இடத்தில் ஷாலினி அஜத்துடன் ரொமான்டிக் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு இருந்தார் .
அதை எடுத்து தன் மகனுக்கு மிகவும் பிடித்த ஃபுட்பால் எக்ஸிபிஷன் இடத்திற்கு கூட்டி சென்றிருந்தார். மேலும், தற்போது மகள் அனுஷ்கா ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அவரை அழகான ஓவியங்கள் குவிக்கப்பட்ட எக்சிபிஷனுக்கு கூட்டி சென்று இருக்கிறார் .
இதையும் படியுங்கள்: இந்தி பிக்பாஸில் கலக்கும் ஸ்ருதிகா…. தமிழில் பேசிய அந்த இரண்டு வார்த்தை – வீடியோ!
அங்கு மெய்மறந்து அஜித்தின் மகளான அனுஷ்கா ஓவியங்களை ரசித்துக்கொண்டிருக்க அதை ஷாலினி வீடியோ எடுத்து படம் பிடித்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவில் அஜித்தின் மகளை பார்த்த ரசிகர்கள். அட நம்ம குட்டி பாப்பா அனுஷ்காவா இது இம்புட்டு வளந்துட்டாரே ஹீரோயின் தோற்றத்திற்கு வந்துவிட்டார் என இந்த வீடியோவை பார்த்து வியந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.