அஜித்துக்காக ஷாலினி செய்த தியாகம்.. கோலிவுட் ‘லவ் பேர்ட்ஸ்’ பற்றி அறியாத விஷயம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2024, 6:30 pm

தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் உடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்துள்ளனர். அதில் அனைவரையும் கவர்ந்த ஜோடி என்றால் அது அஜித் – ஷாலினி தம்பதியர்தான்.

கோலிவுட் லவ் பேர்ட்ஸாக வலம் வந்த இந்த தம்பதி அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டனர். பின்னர் அமர்க்களம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான போதே இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

தொடர்ந்து அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் படத்தில் ஷாலின் நடித்திருந்தார். பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். இதையடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற மகளும், 7 வருடம் கழித்து ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.

Ajith Shalini Daughter Anoushka

குடும்பத்துடன் வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வரும் ஷாலினி, அஜித்துக்காக உச்ச நடிகையாக இருந்த போதே சினிமாவைவிட்டு விலகிவிட்டார்.

இதையும் படியுங்க: ஏஆர் ரகுமான் மனைவிக்கு நாங்க டார்ச்சர் கொடுத்தோம்.. ஒப்புக்கொண்ட ஜிவி பிரகாஷ் அம்மா!

அலட்டல், கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகை ஷாலினிக்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் உண்டு. அஜித்துக்கும் – ஷாலினிக்கு கிட்டத்தட்ட 9 வருடங்கள் வயது வித்தியாசம்.

Ajith Family

44 வயதாகும் ஷாலினி இன்று தனது பிறந்நாளை கொண்டாடி வருகிறார். தற்போது அஜித்துக்கு 53 வயதாவது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ