இது அன்பின் முத்தம்; இதை விட என்ன வேணும்; பிரபல நடிகை பகிர்ந்த ஃபோட்டோ,..
Author: Sudha19 July 2024, 1:14 pm
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அவ்வப்போது தனது குடும்ப புகைப்படம், குழந்தைகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை வந்து பார்த்து கையைப் பிடித்துக் கொண்டு நான் இருக்கிறேன் என்பது போல புன்னகை செய்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

தற்போது தன் மகனுடன் இருக்கும் ஒரு பகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் ஷாலினி.அஜித் மனைவி ஷாலினிக்கு அவரது மகன் ஆத்விக் முத்தம் கொடுக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதை விட ஒரு அம்மாவுக்கு விலை உயர்ந்த பரிசு வேற என்ன உள்ளது? இது அன்பின் முத்தமல்லவா? என்று நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகிறார்கள்.