அஜித் மகள் அனோஷ்காவின் UNSEEN புகைப்படம்.. வெளியிட்ட நடிகை ஷாலினி..!
Author: Vignesh30 January 2024, 12:30 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து அஜித் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார்.
திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகியும், அஜித் ஷாலினிக்கு இப்போது, வரை காதல் குறையாமல் அப்படியே இருந்து வருகிறார்கள். அனோஷ்கா மற்றும் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.
முன்னதாக, நடிகர் அஜித் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைதளத்திலும் இல்லை. ஆனால், நடிகை ஷாலினி மட்டும் கடந்த சில வருடங்களுக்கு முன் தான் சமூக வலைதள பக்கம் வந்தார். அண்மையில், அவர் தனது மகள் அனோஷ்காவின் சிறுவயதில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். இதுவரை, நாம் பார்த்திராத அந்த கியூட்டான போட்டோவிற்கு, ரசிகர்களும் அதிக லைக்ஸ் கொடுத்து வருகிறார்கள்.