ROOM போடட்டான்னு கேட்ட பிரபலம்.. வாரிசு நடிகரின் மகளையும் விட்டிவைக்காத அட்ஜெஸ்ட்மெண்ட்..!

Author: Vignesh
29 February 2024, 7:26 pm

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

varalakshmi sarathkumar-updatenews360

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த அங்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் ஹைதராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். எனவே சமீபத்திய பேட்டி, ஒன்றில் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

அதில், அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். ஒருமுறை டிவி சேனல் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் என் வீட்டிற்கு வந்து ஒரு நிகழ்ச்சி குறித்து பேச வந்தார்கள். நிகழ்ச்சி பற்றி பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது மற்ற விசயங்கள் பற்றி ஓட்டலில் எப்போது பேசலாம் என்று கேட்டார். சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, உடனே கிளம்புங்கள் என்று தெரிவித்துவிட்டேன். இதுகுறித்து என் நண்பர்கள் நீ அமைதியா இருந்தியா அடிக்கவில்லையா என்று கேட்டனர் என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யார்ரா அவன் சரத்குமார் பொண்ணுகிட்டயே வேலையை காட்டி இருக்கான் என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 245

    0

    0