யாரைத்தான் நம்புறதுனே தெரியல.. ஆண் நண்பரின் பகீர் செயலால் நடிகை ஷம்மு ஷாலு வேதனை..!

Author: Vignesh
24 April 2023, 1:45 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

Shalu Shammu-updatenews360

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் 2 மாதங்களுக்கு முன்பு 2 லட்சம் ரூபாயில் ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த 9ம் தேதி இரவு, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நண்பர்களுடன் ஷாலு ஷம்மு பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

பின்னர் பார்ட்டி முடிந்து நள்ளிரவு நேரத்தில், சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் அவர் தங்கி அடுத்தநாள் காலை, தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது, செல்போன் காணாமல் போயிருந்ததைக் கண்டு ஷாலு ஷம்மு அதிர்ச்சி அடைந்தார்.

shalu shammu-updatenews360

இதனையடுத்து, நட்சத்திர விடுதிக்கு சென்று தேடியும் கிடைக்காததால், இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில், தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

shalu shammu - updatenews360

இதனிடையே, தொலைந்துபோன அவருடைய ஐபோன் தன் வீட்டிற்கு பார்சலில் வந்துள்ளது என்றும் அந்த மொபைல் போனை திருடியது அவரின் நண்பர் தான் என்று தெரியவந்துள்ளது.தற்போது ஷாலு ஷாமு, 8 வருட நட்பு வீண் போனது என்று சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!