ரூ.3.5 லட்சம் கட்டுமாறு மிரட்டிய கும்பல்.. வீடியோ வெளியீட்டு திட்டி தீர்த்த ஷாலு ஷம்மு..!
Author: Vignesh7 August 2024, 11:24 am
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் மிஸ்டர் லோக்கல் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக சினிமா பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் கடை திறப்பு விழா நிகழ்ச்சிகள் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கவர்ச்சி உடையில் வந்து காண்போரை கிறங்கடித்தும் வருகிறார்.
அவ்வப்போது, கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மோசடி கும்பல் ஒன்று தன்னிடம் மோசடியில் ஈடுபட முயற்சித்ததாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த நபர் ஷாலு ஷம்முவிடம் மூன்று லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்கி இருப்பதாகவும், அதற்கான பணத்தை கட்டுமாறும் தெரிவித்துள்ளார், இதற்கு நடிகை ஷாலு ஷம்மு தான் எந்த பொருளும் வாங்கவில்லை என கூறவே அதற்கு மறுமுனையில் இருந்தவர்கள் கிரெடிட் கார்டு மேல் உள்ள கடைசி நான்கு எண்களையும், பிறந்த தேதியும் கொடுக்குமாறு பேசியவுடன் இது மோசடி கும்பல் தான் என உறுதி செய்ததுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக பேசி போன் இணைப்பை துண்டித்துள்ளார். தனக்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது என இது குறித்து வீடியோ வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்தும் உள்ளார்.