கேம் சேஞ்சர் ஒருவேளை.. ஷங்கர் உடைத்த சீக்ரெட்.. கொதிப்பில் ரசிகர்கள்!

Author: Hariharasudhan
15 January 2025, 6:53 pm

கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம் என ஷங்கர் கூறியது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

சென்னை: இது தொடர்பாக சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியில், “அனைத்து இயக்குநர்களுக்கும் தாங்கள் என்ன செய்தாலும் திருப்தி வராது.‘கேம் சேஞ்சர் இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. படத்தின் நீளத்தைக் குறைக்க நிறைய நல்லக் காட்சிகளை எடுத்துவிட்டோம்.

ஏனென்றால், படத்தில் அவ்வளவு காட்சிகளையும் வைக்க முடியாது. ஆனால், அவை அனைத்துமே இந்தக் கதைக்குள் தான் வருகிறது. மொத்தமாக 5 மணி நேரக் காட்சிகள் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். ஷங்கரின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்வினைகளைப் பெற்று வருகிறது.

முன்னதாக, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஷ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் கேம் சேஞ்சர். ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம் மற்றும் அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்.

Shankar about Game Changer Reviews

இந்த நிலையில், பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இப்படத்தின் HD PRINT இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் இப்படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கல்குவாரியில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் பகீர் தகவல்!

மேலும், ஷங்கர் இயக்கத்தில் இதற்கு முன்னதாக வெளியான இந்தியன் 2 படமும் எதிர்மறையான விமர்சனங்களையேப் பெற்றது மட்டுமல்லாமல், ஷங்கர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்தன. எனவே, நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

  • Ajith's Son Advik Wins Go Kart Race குட்டி ரேஸர் ரெடி…சென்னையில் நடந்த போட்டியில் மாஸ் காட்டிய அஜித் மகன்…!
  • Leave a Reply