சங்கரின் உதவி இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா? நடுத்தெருவுக்கு வந்த சோகம்!

Author: Shree
24 March 2023, 4:04 pm

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஜென்டில்மேன் படத்தில் தனது கெரியரை ஆரம்பித்து காதலன், இந்தியன் , ஜீன்ஸ் , முதல்வன் , அந்நியன் , எந்திரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவரது படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்து வசூலில் வேட்டையாடும். இவரிடம் வேலைபார்க்கும் அத்தனை கலைஞர்களும் எதிர்காலத்தில் மிகப்பெரிய படைப்பாளிகளாகுவார்கள்.

அப்படி ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் தான் அட்லீ. இன்று பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்தே படம் இயக்குகிறார். இந்நிலையில் ஷங்கரின் உதவி இயக்குனராக காதலன் , இந்தியன், ஜீன்ஸ் படங்களில் பணியாற்றிவர் செல்வேந்திரன்.

இவர் வாய்ப்பு இல்லாமல், வருமானம் இல்லாமல் நடுத்தெருவுக்கு தற்போது வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிலபேரிடம் கதை கூறியும் வாய்ப்பு தரவில்லை. விஜய்யிடம் சென்று கதை சொன்னேன் அவர் ஒரு படம் பண்ணிட்டு வாங்க என சொல்லிவிட்டார். அதற்குள் நிலமை இப்படி ஆகிவிட்டது என்றார்.

சினிமாவை நம்பி சொந்த ஊரைவிட்டு வாய்ப்பு தேடி வந்த செல்வேந்திரன்வாய்ப்பில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.வாய்ப்பு கிடைக்கும் வரை என் ஊருக்கு செல்லபோவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 536

    0

    0