சிவாங்கிக்கு சீக்கிரம் டும் டும் டும்?.. அதுனால தான் CWC-5க்கு வரலையா? அவரே வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
30 March 2024, 11:37 am

சிவாங்கிக்கு சீக்கிரம் டும் டும் டும்?.. அதுனால தான் CWC-5க்கு வரலையா? அவரே வெளியிட்ட பதிவு..!

விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோவில் முக்கியமானது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை விட அடுத்தடுத்த சீசனுக்கு ரசிகர்கள் ஏராளம். அதில் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை என அனைத்து கோமாளிகளும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்து விட்டனர். அந்த அளவுக்கு அனைவரும் ரசிக்கும் படியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

இதன்மூலம் புகழ்பெற்ற சிவாங்கி, புகழ் ஆகிய இருவருமே பெரிய திரைக்கு சென்றுவிட்டனர். சிவாங்கி டான், திரைப்படத்தில் நடித்திருந்தார். புகழ், எதற்கும் துணிந்தவன், என்ன சொல்ல போகிறாய் போன்ற திரைப் படங்களில் காமெடியனாக நடித்து விட்டார். தற்போது, ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Sivaangi-updatenews360-2

இதை தொடர்ந்து, காசேதான் கடவுளடா என்ற படத்தில் கண்ணன் இயக்கத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். அதே போல சமீபத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில், வடிவேலு நடிப்பில் வெளியான படத்தில் ஷிவாங்கி நடித்து இருந்தார்.

என்னதான் பல லட்சம் பாலோவர்கள் இருந்தாலும் ஷிவாங்கியை விமர்சிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றத்தில் இருந்தே இவருக்கு ரசிகர்களுடன் சில ஹேட்டர்ஸ்களும் உருவாகினர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

Sivaangi-updatenews360-2

மேலும், ஷிவாங்கியை Cringe என்று பலர் விமர்சித்து வருவதும் உண்டு. ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர் பெரிதாக கவலைப்படுவது இல்லை. இப்படி ஒரு நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில், லேட்டஸ்ட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளார்.

Sivaangi-updatenews360-2

மேலும், அடுத்த குக்கு வித் கோமாளி சீசனில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் ஷிவாங்கி கூறி இருந்தார். அதற்கேற்றார் போல சமீபத்தில் வெளியான குக்கு வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோவில் கூட சிவாங்கி இடம்பெறவில்லை. முன்னதாக, அன்னையில் சிவாங்கி தனது சமூக வலைதளத்தில் திருமணம் மற்றும் பிள்ளை பெற்றுக் கொள்வது குறித்து பதிவு ஒன்றைப் போல ரசிகர்கள் நிறைய கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இது குறித்து அவர் தனது Threads பக்கத்தில் சோசியல் மீடியாவை திறந்தாலே நான் யாருக்காவது திருமணம் நிச்சயம் முடிந்தது கர்ப்பமாக இருப்பதைத்தான் பார்க்கிறேன். அந்த கட்டத்தில், தான் தற்போது நான் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தங்களுக்கு தோன்றிய பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

sivaangi
  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…