மகளுக்கு நடந்த 2-ம் கல்யாணம்.. தாலி கட்டும்போது எமோஷனலான சங்கர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Author: Vignesh
17 ஏப்ரல் 2024, 11:04 காலை
shankar
Quick Share

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரோகித் என்பவருடன் ஷங்கரின் முதல் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், ரோகித் போக்சோ சட்டத்தில் சிக்கியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், சமீபத்தில் தனது மகளுக்கு இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடு செய்து வந்தார் இயக்குனர் சங்கர்.

மேலும் படிக்க: திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. வேறுவழியில்லாமல் காதலரை கரம் பிடித்த கனவுக்கன்னி..!

இவர்களுடைய, நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட வெளிவந்தது. சமீபத்தில், ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படங்கள் வைரலானது. மேலும், தமிழக முதல்வர் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் என அனைவருக்கும் ஷங்கர் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார். இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் நடைபெற்றது.

shankar daughter marriage

மேலும் படிக்க: ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!

கார்த்திகேயன் என்பவரை ஐஸ்வர்யா கரம் பிடித்துள்ளார். இந்த திருமணத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியானது. மேலும், ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் ஷங்கர் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

shankar daughter marriage

ரஜினி, கமல், சூர்யா, மணிரத்தினம், சுகாஷினி, கார்த்திக், நயன், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு விஜயின் மனைவி சங்கீதா தன்னுடைய தோழிகளுடன் சென்று வாழ்ந்து தெரிவித்திருக்கிறார். விஜய் கோட் படத்தின் ஷூட்டிங் காக ரஷ்யாவில் இருப்பதால் சங்கர் மகள் திருமணத்திற்கு தான் வர முடியாது என்பதால், சங்கீதாவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஜோவிகா எனக்கு பொறக்கல.. உண்மையான அப்பா அவர் தான்.. அதிரவைத்த வனிதாவின் Ex கணவர்..!

தற்போது, திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், மருமகன் மகளுக்கு தாலி கட்டும் போது எடுத்த புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. அப்போது, கைகூப்பி எமோஷனலான மகள் ஐஸ்வர்யாவை ஏக்கத்துடன் சங்கர் பார்க்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆறுதலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 196

    0

    0