இயக்குனர் சங்கரின் பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த 3 டாப் ஹீரோக்கள்.. இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது..!

Author: Vignesh
2 February 2024, 5:30 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில், உள்ள சில இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய திரைப்படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கிய அனைத்து படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில், 1999 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முதல்வன். அர்ஜுனை தாண்டி இந்த படத்தில் மனிஷா கொய்ராலா நாயகியாக நடித்தும். ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாள்கள் நடித்திருந்தனர்.

mudhalvan

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இப்படம் அர்ஜுனனின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கிய திரைப்படமாக அமைந்திருக்கிறது. முன்னதாக, ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் முதலில் தேர்வு செய்த நடிகர்களே கமிட்டாகி அவர்கள் தான் நடிப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது.

அந்த வகையில், நிறைய மாற்றங்கள் முதல்வன் படத்திலும் நடந்துள்ளது. அப்படி இப்போது, முதல்வன் படத்தைப் பற்றிய தகவல்கள் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகியும் வருகிறது. அந்த வகையில், முதலில் படத்தை எழுதும் போது நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்துக் கொண்டுதான் இயக்குனர் சங்கர் எழுதினாராம்.

vijay rajini kamal

ஆனால், ஒரு சில காரணங்களால் இந்தப் படத்தை ரஜினிகாந்த் நிராகரிக்க அடுத்து விஜய்யிடம் கதையை கொண்டு சென்றுள்ளார். அவரும் இந்த படத்தை நிராகரிக்க அடுத்து, கமலிடம் கதை சென்றுள்ளது. அவர் அந்த நேரத்தில் ஹேராம் படத்தை இயக்கி நடித்து வந்ததால், அப்போதைக்கு அவராலும் நடிக்க முடியாமல் போனது. பின்னர் கடைசியாக தான் அர்ஜுனிடம் சென்றுள்ளார் சங்கர். படத்தை அர்ஜுன் ஓகே செய்தும் நடித்து வெற்றி கண்டுள்ளார். இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டோர் மிகவும் வருத்தப்பட்டார்களாம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 458

    0

    0