விஜய்யை தரதரவென இழுத்து சென்ற SAC.. தளபதியின் வீக்னஸை வெளியிட்ட பிரபல இயக்குனர்..!(வீடியோ)

Author: Vignesh
16 February 2024, 9:16 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், விஜய் கைவசம் இருக்கும் படத்தில் மட்டும் நடித்து சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அதன்பின்னர், விஜய் பற்றிய விஷயங்கள் தான் இணையதளத்திலும் தொலைக்காட்சி சேனலிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜய் பற்றி பிரபலங்கள் பேசியது முதல் விஜயின் பழைய பேட்டிகள் வரை இணையதளத்தில் வீடியோக்களாக வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் நண்பன் படத்தில் நடித்திருந்தபோது படக்குழுவினர் பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில், விஜய் அவரது வீட்டில் நடந்து கொண்ட சில சம்பவத்தை இயக்குனர் சங்கர் பகிர்ந்து உள்ளார். எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் போது அவர்கள் வீட்டில் உட்கார்ந்து இருந்தோம். அப்போது, வீட்டில் பயங்கரமாக கத்தி அப்பாவும் விஜய்யும் சண்டை போட்டு கத்திக்கிட்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்த போது, படியில் இருந்து விஜயை தரதரவென்று SAC இழுத்துக் கொண்டு வந்தார்.

shankar sac -updatenews360

இதை பார்த்து அப்பாவுக்கும் பையனுக்கும் பெரிய சண்டை என்று நினைத்தேன். விஜய் அம்மாவும் பயங்கர டென்ஷனாக இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்ததும் என்ன ஆச்சு சார் என்று கேட்டோம். ஒன்றும் இல்லை ஊசி போட்டுக்க மாட்டேன்கிறான் என்று கூறினாராம். இதே சம்பவத்தை விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த பேட்டி ஒன்றில், இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடடா விஜய்க்கு ஊசி என்றால் பயமா என்று கலாய்த்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 314

    0

    0