அலட்டிக்காம நடிக்கிறாரு…உண்மையிலே அவர் கெத்து தா…பிரபல நடிகரை புகழ்ந்து பேசிய இயக்குனர் சங்கர்…!

Author: Selvan
10 January 2025, 6:33 pm

கெத்து தினேஷை பாராட்டிய இயக்குனர் சங்கர்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சில நேர்காணலில் பேசிய சங்கர்,சமீபத்தில் வெளியாகி ரசிகர்களில் பெரும் ஆதரவை பெற்ற லப்பர் பந்து திரைப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.

கடந்த வருடம் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிகர் தினேஷ்,ஹரிஷ் கல்யாண்,சுவாசிகா,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என பலர் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் ஆரம்பத்தில் குறைவான ஸ்க்ரீன்களுடன் வெளியாகி பின்பு மக்களின் பெரும் ஆதரவால் பல ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டு வசூலை வாரி குவித்தது.

இதையும் படியுங்க: COME BACK கொடுத்தாரா சங்கர்…”கேம் சேஞ்சர்”படத்தின் திரை விமர்சனம் இதோ…!

இந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் லப்பர் பந்து படத்தை பாராட்டி வந்தனர்.அந்த வகையில் இயக்குனர் சங்கர் சமீபத்திய பேட்டியில் நான் பார்த்து வியந்த ஒரு அற்புதமான நடிப்பு லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பு,அவர் எப்போதும் அலட்டிக்காமல் ரொம்ப எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.

எனக்கு அவர் நடிக்கிறாரா என்ற சந்தேகமே சில சமயம் எழுந்துவிடுகிறது.லப்பர் பந்து படத்தை பார்த்த பிறகுஅவர் கூட சேர்ந்து படம் பண்ணனும் ஆசையே எனக்கு வந்து விட்டது என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 44

    0

    0

    Leave a Reply