வெளுத்து வாங்கும் மதகஜராஜா…. காணாமல் போன பிரம்மாண்ட இயக்குனர்…!

Author: Selvan
15 January 2025, 1:07 pm

கல்லா கட்டாமல் திணறும் கேம் சேஞ்சர்

இந்த வருட பொங்கல் ரேஸில் தியேட்டரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப்போனதால்,அடுத்தடுத்து பல படங்கள் தங்களுடைய ரிலீஸ் அறிவிப்பை போட்டி போட்டு வெளியிட்டன.

ஏற்கனவே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில்,அடுத்தடுத்து நாட்களில் வசூலை அள்ளலாம் என திட்டம் போட்டிருந்த படக்குழுவிற்கு,பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த வணங்கான் திரைப்படம் நெருக்கடி கொடுத்தது.

இதையும் படியுங்க: கல்யாணம் எப்போ? எனக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது…ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஓவியா..!

இந்த நிலையில் 12 வருடத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,சந்தானம் நடிப்பில் உருவான மதகதராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில்,ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டையை நடந்து வருகிறது.அதிலும் குறிப்பாக சந்தானத்தின் அல்டிமேட் பஞ்ச் காமெடியை பார்க்க மக்கள் கூட்டம் தியேட்டரில் அலைமோதுகிறது.

இதனால் பிரம்மாண்ட இயக்குனரின் கேம் சேஞ்சர் தமிழ்நாட்டில் கல்லா கட்டாமல் திணறி வருகிறது.ரசிகர்களுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு பக்கா என்டர்டைன்மெண்ட் படமாக மதகதராஜா அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kayadu Lohar Viral Video எனக்காக நீங்கள் அடிக்கும்.. கனவுக்கன்னி கயாடு வீடியோ பகிர்வு!