பயில்வானை பந்தாடிய சாந்தனு… பொது மேடையில் செம பல்பு – வைரலாகும் வீடியோ!

Author: Shree
10 May 2023, 7:59 am

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இவரிடம் இருந்து பெரும்பாலான நடிகர், நடிகைகள் நமக்கு எதுக்கு வம்பு என விலகியே இருப்பார்கள். ஆனால், நடிகர் சாந்தனு பாக்கியராஜ் பயில்வான் ரங்கநாதனை பொது மேடையில் அவரது பாணியிலே வச்சி செய்துள்ளார்.

சாந்தனு தற்போது இராவண கோட்டம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற மே 12ம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரோமோஷன் விழாவில் பேசிய சாந்தனுவிடம் பயில்வான் வழக்கம் போல குதர்க்கமான கேள்விகளை கேட்க சாந்தனு வேற மாதிரி ரிப்ளை கொடுத்து நோஸ்கட் செய்துவிட்டார். பல்பு வாங்கிய பயில்வானை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகிறார்கள். சாந்தனு இவர் போல் ஆளை இப்படி தான் டீல் பண்ணணும் நல்லது என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!