நீங்க பண்ண வேலைக்கு உங்க வேற வீட்டுக்கு வரணுமா? விஜய்யால் மனம் நொந்துப்போன பிரபல நடிகர்!

Author: Shree
17 May 2023, 6:35 pm

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே டாப் இயக்குனராக வளர்ந்து நிற்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பார்க்கப்படுகிறார்.

தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனு பார்கவ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால், அந்த கேரக்டர் அப்படியாக பேசப்படவில்லை. கரணம் அந்த கேரக்டர் மிக மிக குறைந்த நேரமே இருந்தது. இதனை நெட்டிசன்ஸ் விமர்சித்து சாந்தனுவை ட்ரோல் செய்தனர்

இந்நிலையில் தற்போது இராவண கோட்டம் திரைப்படத்தில் நடித்து வரும் சாந்தனுவிற்கு அப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் குறித்து பேசினார். லோகேஷ் அண்ணன் என்னை ஒரு முறை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.

ஆனால் ஷூட்டிங் பிசியில் இருந்ததால் என்னால் போகமுடியவில்லை. அதை விஜய் அண்ணாவிடம் ஒரு முறை நேரில், அண்ணா சாந்தனு என் மேல செம கோவத்துல இருக்குறான்னு நினைக்குறேன். வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டா கூட வரமாட்டேங்குறான் என சொன்னாராம். உடனே விஜய் லோகேஷை பார்த்து ” நீ பண்ண வேலைக்கு உன் வீட்டுக்கு சாப்பிட வேற வருவானா”? என நக்கலடித்து சிரித்தாராம்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 441

    3

    1