கழுத்தை நெறிக்கும் கடன்.. தற்கொலை செஞ்சிக்கலாம்னு நினைத்தேன்; கதறி அழுத பாக்கியராஜ் மகன்..!

Author: Vignesh
4 May 2023, 1:30 pm

‘இராவண கோட்டம்’ என்ற படம் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு நடிப்பில் தயாராகி வருகின்றது. இந்த படத்தில், இவருக்கு ஜோடியான கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

அந்த வகையில் ‘இராவண கோட்டம்’ படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சாந்தனு பல விசயங்களை முன்வைத்தார்.

raavana kottam-updatenews360

இராவண கோட்டம் படத்தின் தயாரிப்பாளரான கண்ணன் ரவி எனது தந்தையின் நண்பர் என்பதால் தயாரிப்பு பொறுப்புக்களை தன்னிடம் கொடுத்திருந்ததாகவும், 30 நாட்களுக்கு ஒதுக்கிய பணத்தொகையானது 19 நாட்களிலேயே முடிந்துவிட்டதாகவும், பணப்பிரச்சனை இருந்ததாகவும், அதேபோல் படப்பிடிப்பிலும் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டதால், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட வந்ததாகவும் தெரிவித்தார்.

raavana kottam-updatenews360

மேலும், பணம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை இதன் வாயிலாக தெரிந்து கொண்டதாகவும், உடன் நடிக்கும் சக நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்து உதவியதாகவும், இராவண கோட்டம் படத்துக்காக மிகவும் கடுமையாக உழைத்திருப்பதாகவும், தனது சினிமா பயணத்தில் இது மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும்” என சாந்தனு தெரிவித்துள்ளார்.

raavana kottam-updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2375

    13

    3