கடந்த ஒரு வார காலமாகவே மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகளும் அதன் புகார்களும் தலைவிரித்து ஆடி வருகிறது. இதை அடுத்து பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் மோகன் லால் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மலையாள சினிமா நிர்வாகிகள் கூண்டோடு நேற்று ராஜினாமா செய்து விட்டனர்.
இந்த விஷயம் மேலும் பரபரப்பு கிளப்பியது. அதை அடுத்து தற்போது இது குறித்து பேசி இருக்கும் பிரபல நடிகையான சாந்தி வில்லியம்ஸ், மலையாள சினிமாவைப் பொறுத்தவரை நிறைய பாலிடிக்ஸ் இருக்கு அங்க பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது. 16 வயசு பெண்ணாக இருந்தாலும் 90 வயசுக்கு கிழவியாக இருந்தாலும் விடவே மாட்டாங்க. இரவில் கதவை தட்டும் நபர்கள் தான் இங்கு அதிகம்.
ஆனால், தமிழ் சினிமாவில் அப்படி கிடையவே கிடையாது. நான் இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளேன். இங்கு யாருமே என்னை தப்பா பேசினதே கிடையாது. அதற்காக நான் தமிழ் சினிமாவுக்கு கையெடுத்து கும்பிடுகிறேன். இங்கு இருப்பவர்கள் எல்லாருமே ரொம்ப உணர்வுபூர்வமாக இருக்கிறாங்க அதையும் மீறி சில தவறுகள் இங்கு நடக்குது அப்படின்னா அது அவங்களோட தனிப்பட்ட விஷயம் இதுல நம்ம எல்லாம் தலையிடவே முடியாது .
ஆனால் பல பெண்கள் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்தார்கள் என்று பொது இடத்தில் வந்து சொல்கிறார்கள். விருப்பம் இல்லை என்றால் நேரடியாக சொல்லிவிட்டு சென்றுவிடலாம். ஆனால் அதை பொது இடத்தில் சொல்கிறார்கள். இப்படி சொல்லக்கூடிய பெண்கள் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள் என எனக்கு தோணுகிறது. இதனால் அந்த பெண்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
எனவே சில விஷயத்தை சொல்லும் போது யோசித்துப் பேச வேண்டும். சினிமாவில் நடிகைகளை சாக்கடைப்புழுவா தான் பார்க்கிறாங்க அவங்களுக்கும் மனசு இருக்கு அவங்களுக்கும் குடும்ப இருக்கு. எங்களின் மனதிற்குள்ளும் ரத்தம், சதைத்தான் இருக்கு… அதை ஏன் குத்தி மேலும் ரணமாக்க வேண்டும் என்ற நடிகை சாந்தி வில்லியம்ஸ் அந்த பேட்டியில் பேசினார்.
0
0